×

மெகபூபா முக்திக்கு 3 ஆண்டுக்கு பிறகு பாஸ்போர்ட்

நகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முக்திக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முக்தி மற்றும் அவரது தாயார் குல்ஷன் நசீர் ஆகியோர் பாஸ்போர்ட் கேட்டு நகரில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், மெகபூபா முக்தி தேசநலனுக்கு எதிராக செயல்படலாம், தேசநலனுக்கு குந்தகம் விளைவிக்கலாம் என காவல்துறை விசாரணை அறிக்கையில் தெரிவித்தது. அதன்பேரில் மெகபூபா முக்திக்கும், அவரது தாயாருக்கும் பாஸ்போர்ட்க்கு அனுமதி தர ஸ்ரீநகர் மண்டல் பாஸ்போர்ட் அலுவலகம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மெகபூபா முக்தி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் மெகபூபா முக்திக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக 3 மாதங்களுக்குள் முடிவெடுக்கும்படி பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மெகபூபா முக்திக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மெகபூபா முக்திக்கு 3 ஆண்டுக்கு பிறகு பாஸ்போர்ட் appeared first on Dinakaran.

Tags : Megaphuba Mukhty ,Jammu and Kashmir ,Chief Minister ,Megaphuba Mukhdi ,Dinakaran ,
× RELATED 4வது நாளாக முழு அடைப்பு போராட்டம் பாக்....